Saturday, 14 October 2017

வானத்தில் பிறை நிலவு

அழகே எனக்கு தெரியாமல் நீ
எப்போது நகம் வெட்டி வீசினாய்
வானத்தில் பிறை நிலவு

- ஜெய்  சத்யா

ஒற்றை கால் தவம்

உன் கூந்தலில் ஒரு நாள்
இடம் பெறுவதற்க்காக
எந்தன் வீடு பூக்கள் எல்லாம்
ஒற்றை  காலில் தவம் கிடக்குதடி

- ஜெய்  சத்யா

புகழ்ச்சி விரும்பாத அழகி

உனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதற்காக
ஒவ்வொரு வருடமும் உலக அழகி
பட்டத்தினை விட்டு தருவதில்
என்னடி நியாயம் இருக்கிறது

- ஜெய்  சத்யா 

இலையுதிர் கால மரங்களுக்காக

நட்ட நடு வீதியிலே
ஆடைகளை துறந்துவிட்டு கொஞ்சமும் வெட்கமின்றி
நிர்வாணமாய் நிக்கிறன்றன
இலையுதிர் கால மரங்கள்

பான்சலிக்கு உடை கொடுத்த
கண்ணன் எங்கே சென்றான்
என்று கேட்கின்றன
இலையுதிர் கால மரங்கள்


- ஜெய்  சத்யா 

தங்கம் பூசியவள்

அழகே நீ என்ன பில் கேட்ஸனின் மகளா
இத்தனை விலையிலும் தங்கம் பூசி கொண்டு
வந்து இருக்குகிறாயே !!!

- ஜெய்  சத்யா

தற்கொலை முயற்சி

அழகே
நீ பறிக்காமல் விட்ட மலர்களை பார்
உதிர்ந்து போயிருக்கின்றன
கேட்டேன்.. தற்கொலை முயற்சியாம்
நீ கிடைக்காததால் !!!

- ஜெய்  சத்யா 

பூக்களின் கண்ணீர்

நீ உந்தன் தோட்டத்தில்
ஏனடி ஒற்றை ரோஜாவை மட்டும் பறித்து சென்றாய்
நீ பறிக்காமல் விட்ட ரோஜா மலர்கள்
இரவு முழுவதும் அழுதழுது விட்ட
கண்ணீர் துளிகளை பார் !!!
பனித்துளியாய் !!!

- ஜெய்  சத்யா

விலகிய காதலி

தொட்டு கையில் எடுத்து
மடியில் போட்டு கொஞ்சி
வெகு நாட்கள் ஆகிறது

விலகிய காதலியாய்
எனது புத்தகங்கள்

- ஜெய்  சத்யா 

நிலாமகள்

தான்தான் அழகென்ற தலைக்கணம்
கொண்டு இருக்கிறாள் நிலா மகள்
சற்று உன் மகம் காட்டு கண்ணே
அவள் தாய்மடி புதைந்தழட்டும் !!!

- ஜெய்  சத்யா

மழைத்துளி

சொர்க்கத்திற்கு செல்வதற்காகத்தான்
மழைத்துளிகள் பிறக்கின்றன
என்ன செய்ய சிலவற்றிற்கு தான் உன்
இழல்களில் இடம் கிடைக்கின்றது

- ஜெய்  சத்யா 

எனது சந்தேகம்

கோலாரை விடுத்தது நீ குளிக்கும் கிணற்று நீரில்
தேடினால் தங்கம் கிடைத்தாலும் கிடைக்கும்
எனது சந்தேகம் எல்லாம்
தங்கம் இருப்பது நீ குளிக்கும் நீரிலே  இல்லை
நீ குளித்த நீரிலா ??

- ஜெய்  சத்யா 

புகை வண்டி பயணம்

சவக்குழியை நோக்கி மனிதனின்
புகைவண்டி பயணம்
சிகரெட்

- ஜெய்  சத்யா 

காதல் வேடன் !!!

நண்பனே !
இந்த வாழ்க்கை பயணத்தின்
வழிகளில் காதல் என்ற வேடன் வலை விரித்து காத்திருக்கிறான்
பறந்து செல் பாத்திரமாக
நமது இலக்கு இன்னும் வெகு தொலைவில் !!!

- ஜெய்  சத்யா

கவிதை பற்றாக்குறை

அன்பே !!!
ஒரு சில வார்தைகளாவது பேசிவிடு !!!
ஒரு சில சிணுங்கல் சப்தங்களையாவது கொடுத்துவிடு !!!
தமிழ் மொழியில் கவிதைகள் குறைந்து விட்டனவாம் !!!

- ஜெய்  சத்யா 

நிலவின் மறுபுறம்

நிலவின் மறுபுறம் காரிருள் என்பதை நான் நம்புகிறேன்
உன் ஒளி பொருந்திய முகத்திற்கு பின்னால்
உன் காரிருள் கூந்தல் !!!

- ஜெய்  சத்யா

இரு நிலவு

இரு நிலவு

இந்த உலகிற்கு ஒரு நிலவு என்று
சொன்னவனுக்கு எப்படி தெரியாமல் போனது
நீ ஒருத்தி இந்த உலகில் இருப்பது

- ஜெய்  சத்யா

நியதி

தேய்ந்து வளர்வது தானே நிலவின் நியதி
என்னவளே நீ மட்டும் எப்படி
விதிவிலக்கானாய் !!!

- ஜெய்  சத்யா

விசித்திர மின்னல்

விசித்திர மின்னல்

என்னவளே நீ ஒரு விசித்திர மின்னலடி
அதனால்தான் கண்களை விடுத்தது
இதயம் பறித்து சென்றாய் !!!


- ஜெய்  சத்யா 

கின்னஸ் சாதனை

உனக்கு உடை தைத்து கொடுத்த
தையல்காரனின் பெயர்
கின்னஸ் புத்தகத்தில் வரப்போகிறதாமே !!!
ஒரு ரோஜாவிற்கு உடை தைத்து கொடுத்தற்காக !!!

- ஜெய்  சத்யா

என்று வருவாள்

வைத்த புள்ளிகளை இணைத்து வண்ண கோலமிட
என்று வருவாள் என் தேவதை
வைத்த புள்ளிகளாய் வானிலே
வாடும் விண்மீன்கள் !!!

- ஜெய்  சத்யா

கலப்படம்

கலப்படம் செய்வது
தவறென்று தெரிந்தே
செய்கிறோம் !!!
உன் மனதையும் என் மனதையும் சேர்த்து
காதல் என்ற பெயரால் !!!

- ஜெய்  சத்யா

Role Model

நிற்காமல் ஓடும்
பெரிய முள்ளும்
சிறிய முள்ளும் தான்
இலட்சியத்தை நோக்கி ஓடும் உனக்கு
Role Model !!!                                                                                                                                                      

- ஜெய்  சத்யா

கோபம்

சில வாசனை திரவியங்களை பூசிக்கொண்டதும்,
மாற்றானது மனைவிகளும், காதலிகளும் தத்தம் ஆண் துணைகளை விட்டு,
மற்றவன் பின்னால் செல்வதாக சித்தரிக்கப்படும் விளம்பரங்களை
தடை செய்யாதவரை ....
இங்கு பெண்ணடிமையை பற்றி பேச எவனுக்கும் தகுதி இல்லை...                                                                                                                                                                         

- ஜெய்  சத்யா

ஆணி வேர் !!!

நான் மரமென்று இருந்தால்
என்னில் பல நண்பர்கள் வந்து போகலாம் இலைகளாக !!!
என்னில் பல காதல்கள் வந்து போகலாம் பூக்ககளாக !!!
என்னால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகலாம் விதைகளாக !!!
என்னில் பலர் வந்து பயன் பெறலாம்
பறவைகள் மனிதர்கள் போல !!!
இவை அனைத்தும் எப்படி சாத்தியம்
ஆணி வேறாக நீ இல்லையெனில்
அம்மா !!!

- ஜெய்  சத்யா